“No” to piles of money; “No” to nuclear weapons production! – The outline of the deal Trump is talking about

‘ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்று நேற்று முன்தினம் உலக நாடுகளுக்கு ‘குட் நியூஸ்’ கொடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஈரானும் தங்களிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக ஒப்புக்கொண்டு விட்டதாக தகவல்களும் நேற்று வெளியாகின.

இந்த நிலையில், ட்ரம்ப் ஈரான் உடனான தன்னுடைய ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்கிற அவுட்லைனை தனது ட்ரூத் பக்கத்தில் கூறியுள்ளார்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

“நான் ஈரானுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டால், அது மிகவும் சரியானதாகவும், தரமானதாகவும் இருக்கும்.

ஈரானுக்குக் கொத்துக் கொத்தாகப் பணத்தை வாரிக்கொடுத்து, அவர்கள் அணு ஆயுதத் தயாரிப்பை நோக்கித் தங்குதடையின்றிச் செல்வதற்குக் கம்பளம் விரித்துக் கொடுத்தாரே ஒபாமா, அவரைப் போல ஒரு மோசமான உடன்படிக்கையை நான் செய்ய மாட்டேன்.

நம்முடைய உடன்படிக்கை அதற்கு நேர் எதிரானது. ஆனால் அதை இன்னும் யாரும் பார்க்கவும் இல்லை, அது என்னவென்று யாருக்கும் தெரியவும் தெரியாது.

இன்னும் சொல்லப்போனால், அதன் பேச்சுவார்த்தைகளே இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

அதனால், தங்களுக்கு ஒன்றுமே தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி சும்மா குறை சொல்லிக்கொண்டிருக்கும் இந்த லூசர்ஸ் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.

அவர்கள் சொல்வதைக் கேட்கவும் செய்யாதீர்கள். எனக்கு முன்னால் பதவியில் இருந்து, இந்த அத்தனை பிரச்னைகளையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்த்திருக்க வேண்டியவர்களைப் போல, நான் எப்போதும் தப்பான உடன்படிக்கைகளைச் செய்ய மாட்டேன்!” என பதிவிட்டிருக்கிறார்.


மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.

More From Author

ட்ரம்ப் பதிவு

‘No’ means money in bits and pieces; ‘No’ means nuclear weapon production! – Outline of the agreement Trump talks about

க்ளாடெட் கோல்வின்

Do you know the story of Claudette Colvin, who stood against racial hatred at the age of 15 and changed American law?