English
சென்னை: டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தங்களுக்கு ஏற்ற நபரைத் தேர்தல் நோக்கத்துக்காக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே காலதாமதம் செய்யப்படுகிறது என்று பேசியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால்தான், புதிய டிஜிபி நியமன பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உரிய காலத்தில் அனுப்பிவைக்க இயலவில்லை. வழக்கு முடிந்தவுடன் காலதாமதம் இன்றி அந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது என்று ஏற்கெனவே கூறியதை அவர் புரிந்து கொள்ளவில்லை.
அதன்பிறகு டிஜிபி நியமனப் பட்டியல் தொடர்பாக யுபிஎஸ்சி நடத்திய கூட்டத்தில், விதிகளுக்குப் புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டது குறித்து, தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பைப்பதிவு செய்தது.
Tamil
தமிழக டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சி: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்
சென்னை: டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தங்களுக்கு ஏற்ற நபரைத் தேர்தல் நோக்கத்துக்காக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே காலதாமதம் செய்யப்படுகிறது என்று பேசியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால்தான், புதிய டிஜிபி நியமன பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உரிய காலத்தில் அனுப்பிவைக்க இயலவில்லை. வழக்கு முடிந்தவுடன் காலதாமதம் இன்றி அந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது என்று ஏற்கெனவே கூறியதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதன்பிறகு டிஜிபி நியமனப் பட்டியல் தொடர்பாக யுபிஎஸ்சி நடத்திய கூட்டத்தில், விதிகளுக்குப் புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டது குறித்து, தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பைப்பதிவு செய்தது.
Click the link above to read the full article on the original website.