சென்னை: தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடியில் 4-வது ரயில் பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பெரும்பாலான ரயில்கள் செங்கல்பட்டு வழியாக செல்கின்றன. தினசரி 60-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஆனால், இத்தடத்தில் 3 பாதைகள் மட்டுமே உள்ளன. கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, 4-வது புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே அமைச்சகத்திடம் தெற்கு ரயில்வே வழங்கியது.
Click the link above to read the full article on the original website.


