சென்னை: தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்கிறார்கள்.
தற்போதைய தலைமுறையாவது சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு முதல்கட்டமாக தமிழகத்தில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின் போது தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்டும்.
Click the link above to read the full article on the original website.


