விழுப்புரம்: தீபாவளி விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் பேருந்து, ரயில், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி நள்ளிரவு வரை சொந்த ஊருக்குச் சென்றனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக சுமார் 1.60 லட்சம் வாகனங்களில் பல லட்சம் மக்கள் கடந்து சென்றனர். இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்ததால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் திரும்பத் தொடங்கினர்.
Click the link above to read the full article on the original website.


