சென்னை: ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் எழுத்தாளரும், ஓவியருமான மமதி சாரி எழுதிய ‘என்கோ & பறல் – கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ‘இந்து தமிழ் திசை’ தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ‘இந்து தமிழ் திசை’ தலைமைச் செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் தலைமை வகித்து நூலை வெளியிட, சிறார்கள் தமிஷ், தோஷிகா, கபீனேஷ் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் சங்கர் வி.சுப்ரமணியம் பேசும்போது, ‘பல்வேறு தளங்களில் திறன் பெற்றவராக விளங்குகிறார் மமதி சாரி. சிறார் இலக்கியத்தையும் அண்மைக்காலமாக தன் எழுத்து மற்றும் ஓவிய ஆற்றலால் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளார். எனக்கு பிடித்த சிறார்கதை இரும்புக் கை மாயாவி. அதன்பின், அம்புலிமாமா, சந்த மாமா! தற்போது குழந்தைகளை திசை திருப்ப செல்போனை பயன்படுத்துகின்றனர். அதுவே பின்னாளில் தலைவலியாக மாறுகிறது.
Click the link above to read the full article on the original website.

