சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, 170 இளைஞர்களுக்கு சான்றிதழ்கள், ஊக்கத்தொகைக்கான காசோலை, பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து துணை முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Click the link above to read the full article on the original website.


