உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிறந்த பண்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, கற்பனையில் விவரித்து, வசீகரமான நடையில் எழுதும் மருதனின் எழுத்துகளுக்கு இளம் மாணவர்கள் மட்டுமன்றி, பெரியவர்களும் வாசகர்களாகி விடுகிறார்கள்.
அந்த வகையில், ‘தேன்மிட்டாய்’ என்கிற தலைப்பில் இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’ சிறப்புப் பக்கத்தில் இடம்பெற்ற 25 கட்டுரைகள், இப்போது இரண்டாவது நூலாக உருவாகியிருக்கிறது. அகிரா குரோசாவா, ஜென்னி மார்க்ஸ், ஆட்ரி ஹெப்பர்ன், ஹாருகி முரகாமி, எம்.டி. வாசுதேவன் நாயர், கிளியோபாட்ரா, பாப்லோ பிக்காசோ, பெர்ட்ரண்ட் ரஸல், வெரியர் எல்வின், மேரி கியூரி, ஏ.கே.ராமானுஜன், பிரான்சிஸ் பேகன் போன்ற இந்நூலில் பேசப்படும் பலரும் வாசகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுப்பார்கள். ‘அறிவை மிஞ்சிய ஆயுதம் இல்லை. அதன் ஓர் அங்கமே இந்நூல்’ என்பதை இந்த நூலைப் படித்து முடிக்கையில் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
Click the link above to read the full article on the original website.


