Free coaching classes in Chennai for TNPSC competitive exams

சென்னை: டிஎன்​பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்​றும் 4 உள்​ளிட்ட போட்​டித் தேர்வுகளுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நவ.2-ம் தேதி முதல் நடக்​க​வுள்​ளது. 2026-ம் ஆண்​டு்க்​கான போட்​டித் தேர்வு கால அட்​ட​வணை விரை​வில் வெளி​யாக உள்​ளது.‌ இதற்கான பாடத்​திட்​டங்​களின்​படி தேர்​வர்​கள் எளி​தில் புரிந்து கொள்​ளும் வகை​யில் பயிற்சி வகுப்​பு​கள் நடத்த அம்​பேத்​கர் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​புப் பயிற்சி மையம் திட்​ட​மிட்​டுள்​ளது.

திறமைமிக்க பயிற்​றுநர்​களைக் கொண்டு வகுப்​பு​கள் நடத்​தப்​பட​வுள்​ளன. மேலும் மாதிரித் தேர்​வு​களு​டன் கூடிய கலந்​துரை​யாடல் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட​வுள்​ளது. அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​க​மும், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி​யும் இணைந்து கட்​ட​ணமில்​லாமல் இந்த பயிற்சி வகுப்​பு​களை கடந்த 14 ஆண்​டு​களாக நடத்தி வரு​கிறது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்​கும் மேற்​பட்​டோர் மத்​திய, மாநில அரசு பணி​களில் இணைந்​துள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Extension granted until tomorrow to make corrections in the CSIR NET exam application.

How was the dream of a government job fulfilled? – Sasitharan’s experience sharing | I am the Chief Minister’s Scheme