Between Kakinada and Masulipatnam, the cyclone crossed the coast: 2 women lost their lives.

காக்கிநாடா: ‘மோந்தா’ புயல் ஆந்திராவில் நேற்று இரவு காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. கரையை புயல் கடந்தபோது மணிக்கு 110 கிலோமீ்ட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோன சீமா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை மோந்தா புயல் ஏற்படுத்தி உள்ளது. புயலுக்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 2 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.1,204-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டது. இப்புயல் நேற்று மதியம் காக்கிநாடாவுக்கு 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. 15 கி.மீ. வேகத்தில் காக்கிநாடாவை நோக்கி மெல்ல நகர்ந்த மோந்தா புயல்நேற்று மாலை மேலும் வேகமாக காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே உள்ள நிலப்பரப்பை நோக்கி பயணித்தது. அப்போது காற்றின் வேகமும் அதிகரித்தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Training for women’s group to relieve stress

Ernakulam-Bengaluru ‘Vande Bharat’ to start soon: Vice President C. P. Radhakrishnan informs