82,000 students applied under the Free Compulsory Education Rights Act: Deadline on August 31

சென்னை: நடப்​பாண்டு இலவசக் கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) சேர்க்​கைக்கு 82,016 மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். இதற்​கான குலுக்​கல் தேர்வு முறை அக்​.31-ல் நடை​பெறும் என பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

இலவசக் கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி தனியார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்​படு​வார்​கள். இதன்படி, தமிழகத்​தில் இது​வரை 5 லட்​சம் குழந்தைகள் தனி​யார் பள்​ளி​களில் படிக்கின்​றனர். இந்த திட்​டத்​துக்​கான நிதியை மத்​திய அரசு வழங்​காத​தால், 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கானமாணவர் சேர்க்​கையை பள்​ளிக்​கல்​வித் துறை நிறுத்தி வைத்​திருந்​தது. இதுகுறித்த வழக்​கில் உயர் நீதி​மன்​றமும் உச்ச நீதி​மன்​ற​மும் அறி​வுறுத்தியதை யடுத்து மத்​திய அரசு நிதியை விடு​வித்​தது. இதையடுத்து பள்​ளி​களில் ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்ட மாணவர்​களில் தகு​தி​யானவர்​களை ஆர்​டிஇ ஒதுக்​கீட்​டில் பதிவு செய்ய வேண்​டுமென அறி​வுறுத்​தப்​பட்​டது. அதன்​படி, மாநிலம் முழு​வதும் உள்ள 7,717 பள்​ளி​களில் எல்​கேஜிவகுப்​பில் 81,927 குழந்தைகளும், ஒன்​றாம் வகுப்​பில் சேர 89 பேரும் விண்​ணப்​பித்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Compensation for farmers affected by rain and floods: Vaiko’s request to the government.

The schedule for the 10th and 12th public exams will be released on November 4?