சிவகங்கை: ‘கரூர் சென்றால் உயிருக்கு ஆபத்து இருப்பதால், விஜய் அங்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை,
முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கரூரில் மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. அங்கு சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. அதனால் கரூர் செல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியிருக்கலாம்.
Click the link above to read the full article on the original website.


