குமுளி: மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு தொடர் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
இதற்காக நேற்று பிற்பகலில் இருந்தே பக்தர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்ததால் குறைவான பக்தர்களே நேற்று சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்தனர். இதனால் பம்பை, அப்பாச்சிமேடு, நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிச் காணப்பட்டன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


