சென்னை: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்’ என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.27) அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்குப் பின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில், “மக்களாட்சி மாண்பைச் சிதைப்பதையும், ஜனநாயகத்தை சின்னாபின்னப் படுத்துவதையும் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதே ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான பழக்கம் ஆகும். அதற்கு ஏற்ப தன்னாட்சி பெற்ற அமைப்புகளையும் தங்களது விருப்பத்துக்கு வளைத்து செயல்படுத்தி வருகிறது.
Click the link above to read the full article on the original website.


