புதுடெல்லி: களத்தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித் சர்மா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் அண்மையில் முடிவடைந்தது. இதில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன. 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டி வரை ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரால் விளையாட முடியாது. இந்த ஒருநாள் தொடருடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அணியிலிருந்து அனுப்பப்படுவார் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால், இதுதொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த ரோஹித் சர்மா தனது பேட்டால் அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.


