On October 27, a new low-pressure area is intensifying into a cyclone: heavy rainfall expected in Tamil Nadu until October 28.

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அக்டோபர் 27-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் நாளை (அக்.25) முதல் 28-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நாளை (அக்.25) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர், 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Former student mysteriously dies in Mallipattinam government school campus.

Frequent unannounced power cuts in the Rameswaram areas!