English
Speaking at a 'The Hindu' newspaper event held in Bengaluru on Saturday, Telangana Chief Minister Revanth Reddy spoke about the 'HYDRAA' organization created to remove encroachments on lakes and water bodies in Hyderabad. At that time, he said, ``Adolf Hitler's favorite word was 'Hydra'. His main group, which could assassinate anyone, was named 'Hydra'. Inspired by Hitler's organization, I named this project 'Hydra'." He also compared the demolition actions of this organization to the war damage taking place between Iran and Israel.

The fact that the chief minister of a democratic country publicly spoke on a public platform about a fascist dictator hated by the entire world as his inspiration has caused a major stir in political circles.
In this regard, former Kerala Chief Minister Pinarayi Vijayan, in a post on his Facebook page, said, ``Revanth Reddy’s statement is shocking and an insult to democratic society. It is shameful that the Congress party has a chief minister who openly worships the greatest fascist the world has ever seen.
“A chief minister saying that Hitler’s brutal system, which could kill anyone, is his inspiration is a threat to democracy as a whole,” he noted.
Union Minister G. Kishan Reddy posted on his X page, “Revanth Reddy’s remarks reflect the Congress party’s dangerous Hitler-like and Emergency-era mindset. From the Emergency to Hitler, Congress has always sought to suppress the voice of the people. Revanth Reddy should apologize to the people of Telangana for his speech,” he wrote.

This HYDRA body was created by the Telangana government in July 2024 to remove encroachments. It is noteworthy that it has already come under severe criticism from the Telangana High Court and legal scrutiny for multiple illegal demolitions and for violating court orders.
Tanglish
பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற 'தி இந்து' நாளிதழின் nigazhchi ondril pesiya தெலங்கானா mudhalvar Revanth Reddy, Hyderabad-il aerigal matrum neernilaihal aakkiramippai agatruvatharkaga uruvaakkappatta 'Hydra' (HYDRAA) amaippu kurithup pesinaar. Appothu, ``Adolf Hitler-kku migavum piditha vaarthai 'Hydra'. Yaarai vendumaanalum padukolai seyyakoodiya avarathu mukkiyak kuzhuvukku 'Hydra' endruthaan peyaridappattathu. Hitler-in antha amaippai udvegamaga konduthaan, naan intha thittathirku 'Hydra' endru peyaritten" enak kurippittaar. Melum, intha amaippin idippu nadavadikkaigalai Iran - Israel naadugalukku idaiye nadakkum porch sedhangaludanum oppittup pesinaar.

Jananayaga naattin mudhalamaichar oruvar, ulagame verukkum oru paasisa sarvathigaraiyath thangalukku udhvegam endru pothumedaiyil pesiyiruppadhu arasiyal vattaratthil perum adhirvalaigalai yerpaduththiyulladhu.
Idhuthodarbaga Kerala munnal mudhalvar Pinarayi Vijayan thanadhu muganool pakkathil veliyittulla padhivil, ``Revanth Reddiyin indha karuthu adhirchiyalippadhodu, jananayaga samugaththirku izhaikkappatta avamaanam. Ulagam kanda migapperiya paasisavaadhiyai pagirangamaaga vazhipadum oru mudhalamaicharaik Kாங்கிரஸ் katchi kondiruppadhu vetkkakedaanadhu.
Yaarai vendumaanaalum kollakoodiya Hitlerin kodooramaana amaippai thanakku udvegam endru oru mudhalamaichar kooruvadhu ottumotha jananayagathirkē achchuruththal." enak kurippittirukkiraar.
Mathiya amaichar Ji. Kishan Reddy thanadhu X pakkathil, "Revanth Reddiyin indha karuththukkal Congressin aabaththaana Hitler matrum avasaraneilai kaala mananilaiyai prathibalikkinrana. Avasaraneilai mudhal Hitler varai - Congress eppodhum makkalin kuralai odukka vē ninaikkiradhu. Thanadhu pēchchukkaaga Telangana makkalidam Revanth Reddy mannippu kētkka vēndum" endru padhivittullaar.

Kadantha 2024-m aandu July maadham aakkiramippugalai agatruvatharkaaga Telanganaa arasaal uruvaakkappatta indha Hydra amaippu. Earkaneve pala sattaviruddha idippugal matrum needhimandra uththaravugalai meeriyadhaaga Telanganaa uyar needhimandratthin kadumaiyaana kandanangalukkum, sattareethiyaana aayvugalukkum ullaagiyiruppadhu kurippidaththakkadhu.
Tamil
பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற ‘தி இந்து’ நாளிதழின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ‘ஹைட்ரா’ (HYDRAA) அமைப்பு குறித்துப் பேசினார். அப்போது, “அடால்ஃப் ஹிட்லருக்கு மிகவும் பிடித்த வார்த்தை ‘ஹைட்ரா’. யாரை வேண்டுமானாலும் படுகொலை செய்யக்கூடிய அவரது முக்கியக் குழுவிற்கு ‘ஹைட்ரா’ என்றுதான் பெயரிடப்பட்டது. ஹிட்லரின் அந்த அமைப்பை உத்வேகமாகக் கொண்டுதான், நான் இந்தத் திட்டத்திற்கு ‘ஹைட்ரா’ என்று பெயரிட்டேன்” எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த அமைப்பின் இடிப்பு நடவடிக்கைகளை ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்ச் சேதங்களுடனும் ஒப்பிட்டுப் பேசினார்.

ஜனநாயக நாட்டின் முதலமைச்சர் ஒருவர், உலகமே வெறுக்கும் ஒரு பாசிச சர்வாதிகாரியைத் தங்களுக்கு உத்வேகம் என்று பொதுமேடையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து அதிர்ச்சியளிப்பதோடு, ஜனநாயக சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். உலகம் கண்ட மிகப்பெரிய பாசிசவாதியை பகிரங்கமாக வழிபடும் ஒரு முதலமைச்சரைக் காங்கிரஸ் கட்சி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
யாரை வேண்டுமானாலும் கொல்லக்கூடிய ஹிட்லரின் கொடூரமான அமைப்பைத் தனக்கு உத்வேகம் என்று ஒரு முதலமைச்சர் கூறுவது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில், “ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கள் காங்கிரஸின் ஆபத்தான ஹிட்லர் மற்றும் அவசரநிலை கால மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. அவசரநிலை முதல் ஹிட்லர் வரை – காங்கிரஸ் எப்போதும் மக்களின் குரலை ஒடுக்கவே நினைக்கிறது. தனது பேச்சுக்காக தெலங்கானா மக்களிடம் ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகத் தெலங்கானா அரசால் உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரா அமைப்பு. ஏற்கனவே பல சட்டவிரோத இடிப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களுக்கும், சட்டரீதியான ஆய்வுகளுக்கும் உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.


