மறுபிரதி உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்தவர்களை தேர்வுத் துறை அலுவலர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிப்பதாக மாணவர்கள், பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கான ஆண்டுத் தேர்வுகளை நடத்திவருகிறது. பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் இயக்குநரகமே அச்சிட்டு விநியோகம் செய்கிறது.
அசல் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சிக்கான சான்றிதழ் ஆகியவற்றை பெற தேர்வுத் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பெறும் நடைமுறை கடந்த ஆண்டுகளில் இருந்தது. ஆனால், இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு மறுபிரதி சான்றிதழ் ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் தாமதிக்கும் நிலை இருந்தது.
Click the link above to read the full article on the original website.


