Delhi blast | Investigation from all angles: Union Home Minister Amit Shah says

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் நேற்று முன்​தினம் மாலை​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம், நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இந்த சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்​தனர்.

இதுதொடர்​பாக ‘எக்​ஸ்' தளத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டுள்ள பதி​வில், “டெல்லி குண்​டு​வெடிப்பு உயி​ரிழப்​பால் எனக்கு ஏற்​பட்ட வேதனையை வார்த்​தைகளால் விவரிக்க இயலாது. அன்​புக்​குரிய​வர்​களை இழந்​தவர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்துக் கொள்கிறேன். குண்​டு​வெடிப்பு நடந்த இடத்தைப் பார்​வை​யிட்​டேன், காயம் அடைந்​தவர்​களை மருத்​து​வ​மனை​யில் சந்​தித்​தேன். அவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன். இந்த சம்​பவம் குறித்து உயர் அமைப்​பு​கள் முழு வீச்​சில் விசா​ரித்து வரு​கின்​றன. அவை இதுகுறித்து ஆழமாக ஆரா​யும்’’ என்று கூறி​யுள்​ளார்.
குண்​டு​வெடிப்​பில் ஏற்​பட்ட உயி​ரிழப்​புக்கு பிரதமர் நரேந்​திர மோடி​யும் இரங்​கல் தெரி​வித்​தார். சம்பவ இடத்​தில் என்​எஸ்​ஜி, டெல்லி காவல்​துறை, எப்​எஸ்​எல் உள்​ளிட்ட பல்​வேறு அமைப்​பு​கள் தற்​போது விசா​ரணை நடத்தி வரு​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Protests held at 42 locations across Tamil Nadu condemning SIR work: DMK and alliance party leaders participate

68.52% voter turnout in the final phase of the Bihar election: opinion poll gives NDA a chance of victory