சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆனால் மோந்தா புயல் காரணமாக மழை பெய்ததால் மைதானத்தில் உள்ள அனைத்து ஆடுகளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக முதல் நாளில் நடைபெற இருந்த அனைத்து ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டன.
2-வது நாளான இன்று ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று 16 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பகல் 12 மணிக்கு போட்டிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நாளை (29-ம் தேதி) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.

