கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 21-ம்
தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் முதல் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் முன்னணி பேட்ஸ்மேனான மார்னஷ் லபுஷேன் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
மோசமான பார்ம் காரணமாக கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மார்னஸ் ஷபுஷேன் நீக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர், உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். 31 வயதான தொடக்க வீரரான ஜேக் வெதரால்ட் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் மேட் ரென்ஷா, சாம் கான்ஸ்டாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Click the link above to read the full article on the original website.


