English
The first match of the ODI series, in which India and Afghanistan face each other for the first time, will be held on Saturday in Dharamshala, Himachal Pradesh.
Although fans are disappointed that Virat Kohli, who was injured in an IPL match, will not feature in this series, Rohit Sharma, who also picked up an injury in the same match, has regained fitness and will play in it, which may offer some consolation.
The Indian team management is beginning its plan to prepare the squad for the 2027 World Cup from this series. As a replacement for the injured Hardik Pandya, it will closely watch Nitish Kumar Reddy’s performance. Shubman Gill, as the captain for the ODI format, has so far lost two of the three series he has led. Therefore, he will be eager to perform well in order to establish himself as a successful captain.
1.30 PM
Dharamshala
Star Sports, Jio Hotstar
Tanglish
Indhiya - Aapgaanisthaan mudhalmuraigaa mothum orunaal thodaril mudhal aattam, Himaachala pradesa maanilam Thaamasaalaavil sanikkizhamai nadaiperugiradhu.
IPL aattathil kaayamadaindha Viraat Koli indha thodaril kalam kaanaadhadhu rasigargalukku aemaatram endraalum, adhe pottiyil kaayam kanda Rohith Shaarma udarthagudhi petru idhil vilaiyaadavulladhu, satru aarudhal alikkalaam.
2027 ulagak koppai pottikku aniyai thayaar seyyum thittathai, indha thodarilirundhu indhiya ani nirvaagam thodangugiradhu. Kaayam kandulla Haardik Pandiyaavukkaana maattraaga, Nitheeshkumaar Rettiyin aattathai uttru nokkavulladhu. Orunaal formattukkaana kaepatanaaga Shubman Gill idhuvarai 3 thodargalil, irandil tholvi kandullaar. Enave, thannai vettrikaramana kaepatanaaga niruvuvadharkaaga avar munaippudan seyalpaduvaar.
nankagal 1.30 mani
Dharmasaala
Star Sports, Jio Hotstar
Tamil
இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தா்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஐபிஎல் ஆட்டத்தில் காயமடைந்த விராட் கோலி இந்தத் தொடரில் களம் காணாதது ரசிகா்களுக்கு ஏமாற்றம் என்றாலும், அதே போட்டியில் காயம் கண்ட ரோஹித் சா்மா உடற்தகுதி பெற்று இதில் விளையாடவுள்ளது, சற்று ஆறுதல் அளிக்கலாம்.
2027 உலகக் கோப்பை போட்டிக்கு அணியை தயாா் செய்யும் திட்டத்தை, இந்தத் தொடரிலிருந்து இந்திய அணி நிா்வாகம் தொடங்குகிறது. காயம் கண்டுள்ள ஹா்திக் பாண்டியாவுக்கான மாற்றாக, நிதீஷ்குமாா் ரெட்டியின் ஆட்டத்தை உற்று நோக்கவுள்ளது. ஒருநாள் ஃபாா்மட்டுக்கான கேப்டனாக ஷுப்மன் கில் இதுவரை 3 தொடா்களில், இரண்டில் தோல்வி கண்டுள்ளாா். எனவே, தன்னை வெற்றிகரமான கேப்டனாக நிறுவுவதற்காக அவா் முனைப்புடன் செயல்படுவாா்.
நண்பகல் 1.30 மணி
தா்மசாலா
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டாா்
மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.


