தின்சுகியா: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அசாம் – சர்வீசஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நேற்று அசாமில் உள்ள தின்சுகியா நகரில் தொடங்கியது. முதலில் பேட் செய்த அசாம் அணி 17.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிரத்யுன் சைகியா 52, ரியான் பராக் 36 ரன்கள் சேர்த்தனர்.
சர்வீசஸ் அணி சார்பில் மோஹித் ஜங்க்ரா, அர்ஜுன் சர்மா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர். அர்ஜுன் சர்மா வீசிய 12-வது ஓவரின் 3-வது பந்தில் ரியான் பராக் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்த பந்துகளில் சுமித் காடிகோன்கர், சிப்சங்கர் ராய் ஆகியோரை வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அர்ஜுன் சர்மா 6.1 ஓவர்களை வீசி 46 ரன்களை விட்டுக்கொடுத்து ஹாட்ரிக்குடன் மொத்தம் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
Click the link above to read the full article on the original website.


