English
Bowling all-rounder Manav Suthar, who recently made his debut for the Indian team in the Test against Afghanistan, will play for Warwickshire in two rounds of England’s county cricket.
Since the team has signed him for a short period, he will feature for Warwickshire in matches against Yorkshire (June 12-15) and Somerset (June 19-22). Manav Suthar, who took 7 wickets in the Test against Afghanistan, has taken 129 wickets in 29 first-class matches.
Tanglish
Aapgaanistaanukku ethiraana Testtin moolamaaga, anmaiyil India aniyil arimugamaana bowling all-roundar Maanav Sudar, Englandin County crickettil Vaarvikshair anikkaaga iru sutrugalil vilaiyaadavullaar.
Kurugiya kaalaththukku antha ani avarai oppantham seythulla nilaiyil, Yorkshair (June 12-15), Saamarsset (June 19-22) anigalukku ethiraana aattaththil avar Vaarvikshair aniyil kalam kaangiraar. Aapgaanistaanukku ethiraana Testtil 7 wicketugal saayththa Maanav Sudar, mudalthara crickettil 29 aattangalil 129 wicketugal eduththullathu kurippidaththakkathu.
Tamil
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டின் மூலமாக, அண்மையில் இந்திய அணியில் அறிமுகமான பௌலிங் ஆல்-ரவுண்டா் மானவ் சுதா், இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் வாா்விக்ஷைா் அணிக்காக இரு சுற்றுகளில் விளையாடவுள்ளாா்.
குறுகிய காலத்துக்கு அந்த அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், யோா்க்ஷைா் (ஜூன் 12-15), சாமா்செட் (ஜூன் 19-22) அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் அவா் வாா்விக்ஷைா் அணியில் களம் காண்கிறாா். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகள் சாய்த்த மானவ் சுதா், முதல்தர கிரிக்கெட்டில் 29 ஆட்டங்களில் 129 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.


