The U.S. is fully focused on Iran’s nuclear weapons; meanwhile, China is completely ready to stand against the U.S.!
on
English
The United States is making intense efforts to buy enriched uranium from Iran. At this time, China is quietly carrying out important work in building up its nuclear weapons capability. It is well known that there is competition between the United States and China on a global scale. Therefore, each country is also determined to be “better” than the other in every way... and is taking actions toward that. China’s current activity is part of that. China’s buildupIran war; Trump, who hopes for an end to the war;Iran Doesn’t Care — Trump’s “Election Fear”? With the capabilities it already has, China can now launch its nuclear weapons at any city in the United States. Reports have emerged that China is currently expanding this capability even further. According to Reuters, China is building a vast network near its isolated nuclear weapons depots, which house its longest-range missiles, including launch sites, bunkers, and communications hubs in Beijing. Based on satellite images reviewed by Reuters, China currently has more than 80 missile launch sites,It is expanding its air defense batteries. This is certainly a dangerous warning to the United States and to countries around the world.
ஈரானிடம் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்க அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த வேளையில், சீனா சத்தமே இல்லாமல் அணு ஆயுதக் கட்டமைப்பில் முக்கியமான வேலையை செய்து வருகிறது.
உலக அளவில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.
அதனால், எல்லா விதத்திலும் ஒரு நாடு இன்னொரு நாட்டை விட, ‘சிறந்ததாக’ இருக்க வேண்டும் என்று முனைப்புடனும் இருக்கிறது… அதற்கான செயல்களையும் செய்து வருகிறது.
அதில் ஒரு பகுதி தான் சீனாவின் தற்போதைய செயல்பாடு.
சீனாவின் கட்டமைப்பு
தங்களிடம் இருக்கும் வசதி மூலம் இப்போதே சீனா தனது அணு ஆயுதத்தை அமெரிக்காவின் எந்த நகரத்தின் மீது வேண்டுமானாலும் ஏவலாம்.
இந்த வசதியைத் தற்போது இன்னும் விரிவாக்கி வருகிறது சீனா என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தகவலின் படி, சீனா தங்களது மிக நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளைக் கொண்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அணு ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில், பெய்ஜிங் ஏவுதளங்கள், பதுங்கு குழிகள் மற்றும் தகவல் தொடர்பு முனைகள் அடங்கிய ஒரு பரந்த வலையமைப்பை உருவாக்கி வருகிறது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு செய்த விண்வெளி புகைப்படங்களின் படி, சீனா தற்போது 80-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு பேட்டரிகளை விரிவாக்கி வருகிறது.
இது அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் நிச்சயம் ஆபத்தான எச்சரிக்கை தான்.
மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.