மதுரை: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு போலீஸார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஜூன் 26-ம் தேதி மதுரை திடீர் நகர் அங்கன்வாடி அருகே போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, 24 கிலோ கஞ்சா கைப்பற்றியதாகக் கூறி 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் விக்னேஷ் என்பவர் உட்பட 7 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விக்னேஷ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விக்னேஷ் கஞ்சா வைத்திருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் போலீஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.
Click the link above to read the full article on the original website.


