Test series against South Africa ‘A’ team: Rishabh Pant appointed captain of India ‘A’ team

புதுடெல்லி: கா​யத்​தில் இருந்து குணமடைந்​துள்ள இந்​திய கிரிக்​கெட் அணி​யின் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ராக 2 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாட உள்ள இந்​தியா ‘ஏ’ அணி​யின் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

ரிஷப் பந்த் கடந்த ஜூலை மாதம் மான்​செஸ்​டரில் நடை​பெற்ற இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான 4-வது டெஸ்ட் போட்​டி​யில் காயம் அடைந்​தார். இதனால் அவர், ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரிலும் பங்​கேற்​க​வில்​லை.
இந்​நிலை​யில் காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள அவர், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ராக நடை​பெற உள்ள 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் இந்​தியா ‘ஏ’ அணி​யின் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இந்​தத் தொடரின் முதல் போட்டி வரும் 30-ம் தேதி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெறுகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Table Tennis Ranking List: Cinderella – Divyanshi Takes the Top Spot and Impresses

Chennai Open Tennis: Wild Card for Srivalli