ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாண்டூருவிலிருந்து நேற்று அதிகாலை 4.40 மணிக்கு தெலங்கானா அரசு பேருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்தில் 72 பேர் பயணம் செய்தனர்.
சரியாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்ஜகூடா எனும் இடத்தில், ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக எதிரே வந்த டிப்பர் லாரி, அரசு பேருந்தின் ஓட்டுநர் உள்ள வலது புறம் மோதி, பேருந்தின் மீதே கவிழ்ந்தது. அப்போது, டிப்பர் லாரியில் இருந்த ஜல்லி கற்கள் முழுவதும் பேருந்துக்குள் விழுந்தது. இந்த கோர விபத்தில் இரு வாகன ஓட்டுநர்கள், 10 பெண்கள், 11 மாத குழந்தை, 8 ஆண்கள் என மொத்தம் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Click the link above to read the full article on the original website.


