பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு – நாகாலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 115 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 201 ரன்களும், விமல் குமார் 189 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து விளையாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 127 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்தது. தேகா நிஸ்சல் 161 ரன்களும், இம்லிவதி லெம்தூர் 115 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நாகாலாந்து அணி 157.4 ஓவர்களில் 446 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தேகா நிஸ்சல் 175 ரன்களும், இம்லிவதி லெம்தூர் 146 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
Click the link above to read the full article on the original website.


