Passenger train collides with freight train in Chhattisgarh – 4 dead; several injured

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

பிலாஸ்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் – காட்னி இடையே லால் காடன் பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், பயணிகள் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உறுதிப்படுத்தியுள்ளார். "மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Modi instructs BJP workers to ensure that women vote in large numbers in Bihar

“Arrest Salem Arul for disturbing public peace” – Lawyer K. Balu