திருப்பத்தூர்: மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் நினைவுதினம் அரசு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரிய கருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Click the link above to read the full article on the original website.


