English
MDMK general secretary Vaiko said today (June 17) that the Tamilaga Vettri Kazhagam government is functioning without giving room for the words “commission” and “corruption.”
While various parties in the DMK alliance extended support to TVK, MDMK was unable to support TVK because it did not contest under its own symbol. Following this, after becoming Chief Minister, Vijay met Vaiko as a courtesy and received his greetings.
Subsequently, MDMK general secretary Vaiko met and spoke with Chief Minister Vijay at the Chennai Secretariat today.
Later, Vaiko told reporters:
''I have met the Tamil Nadu Chief Minister and requested that permission should not be granted for the hydrocarbon project.
Chief Minister Vijay is simple and transparent. The TVK government is functioning without giving room to words like commission and corruption. TVK’s rule is a corruption-free administration,'' he said.
In response to the question, "Are the MDMK MLAs resigning?", Vaiko said, ''I cannot answer speculations. A decision on the alliance will be taken after convening the general council and discussing it. The MDMK members’ position will become clear in the Assembly. If something good happens in the government, I will welcome it; if something bad happens, I will oppose it,'' Vaiko said.
MDMK MLAs to resign Vaiko responds after meeting Chief Minister Vijay
Tanglish
Kamishan, karapshan endra sorkalukku idamalikkaamal தமிழக வெற்றிக் கழக arasu seyalpattu varuvathaaga மதிமுக pothுச்செயலாளர் Vaiko indru (June 17) தெரிவித்தார்.
தவெகவுக்கு திமுக koottaniyil ulla palveru katchigal aatharavaliytha nilaiyil மதிமுக thanich chinnathil pottiyidathathaal தவெகவுக்கு aatharavallikka mudiyamal ponathu. Ithaiyettu mudhalvarana piragu Vijay, mariyaathai nimithamaaga Vaikovaiச் santhithu vaazhthupetraar.
Ithanai thodarndhu Chennai thalaiமைச் செயலகத்தில் mudhalvar Vijayyudan மதிமுக பொதுச் செயலாளர் Vaiko indru santhithu pesinaar.
Pinnar seythiyaalargaludan Vaiko pesiyathavathu:
''ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
முதல்வர் விஜய் எளிமையுடன் இருக்கிறார், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறார். கமிஷன், கரப்ஷன் இன்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தவெக அரசு செயல்படுகிறது. ஊழல் இல்லாத ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது'' எனக் கூறினார்.
மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்கிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, ''யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து பொதுக்குழு கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மதிமுக உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் தெரியவரும். ஆட்சியில் நல்லது நடந்தால் வரவேற்பேன், கெட்டது நடந்தால் எதிர்ப்பேன்'' என வைகோ குறிப்பிட்டார்.
MDMK MLAs to resign Vaiko responds after meeting Chief Minister Vijay
Tamil
கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) தெரிவித்தார்.
தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது. இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் வைகோ பேசியதாவது:
”ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
முதல்வர் விஜய் எளிமையுடன் இருக்கிறார், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறார். கமிஷன், கரப்ஷன் இன்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தவெக அரசு செயல்படுகிறது. ஊழல் இல்லாத ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது” எனக் கூறினார்.
மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்கிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, ”யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து பொதுக்குழு கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மதிமுக உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் தெரியவரும். ஆட்சியில் நல்லது நடந்தால் வரவேற்பேன், கெட்டது நடந்தால் எதிர்ப்பேன்” என வைகோ குறிப்பிட்டார்.
MDMK MLAs to resign Vaiko responds after meeting Chief Minister Vijay
மூலதளம்: தமிழ்நாடு
Click the link above to read the full article on the original website.

