India defeated America

English

In the Nations Cup hockey tournament being held in New Zealand, the Indian women’s team defeated the United States 3-2 in their opening match on Monday.

In this match, the United States’ Ashley Sessa gave her team the lead by scoring in the 4th minute itself. Then, Madeline Zimmer (7’) scored for that team, and as the U.S. extended its lead to 2-0, the pressure on India increased.

At this stage, Deepika, who opened India’s scoring in the 17th minute, impressed by increasing it to 2 in the 24th minute. This brought the match level at 2-2. Before the first half ended, Navneet Kaur scored in the 28th minute, giving India a 3-2 lead.

In the second half, with the directions switched, India displayed a wall-like defense, and the United States’ goal attempts did not bear fruit. In the end, India won 3-2.

India will face Japan in the next match on Tuesday (June 16).


Tanglish

Niyūsilāntil nadaiperum Nēṣans Kōppai Hākki Pōttiyil Indiya Magalir Ani thanadhu mudhal āttathil 3-2 kōl kaṇakkil Amerikāvai thingaḷkizhamai venradhu.

Indha āttathil mudhalil Amerikāvin Āshli Cesa 4-āvathu nimiṣathileyē kōladiththu aniyai munnilai perach seidhār. Thodarndhu, andha aniyin Medileyn Jimmar (7’) kōl adikka, Amerikā 2-0 ena munnilaiyai adhigariththadhaal, Indiyāvukku nerukkadi kūdiyadhu.

Innilaiyil 17-āvathu nimiṣathil Indiyāvin kōl kaṇakkai thodangiya Deepikā, 24-āvathu nimiṣathil adhai 2-āga adhigariththu asaththinār. Idhanāl āttam 2-2 ena saman ānadhu. Mudhal pādhi mudivadaiyum munbāgavē Navnīth Gaur 28-āvathu nimiṣathil kōl adikka, Indiyā 3-2 ena munnilai petradhu.

Aadum thisaigal maatrappatta 2-aavathu paathiyil India aran pondra thaduppaattaththai velippaduththa, Amerikkaavin goal muyarchigalukku palan kidaikkavillai. Mudivil India 3-2 goal kanakkil vetri petrathu.

India adutha aattaththil, Japaanudan Sevvaaykkizhamai (Joon 16) mothugirathu.


Tamil

நியூஸிலாந்தில் நடைபெறும் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-2 கோல் கணக்கில் அமெரிக்காவை திங்கள்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் அமெரிக்காவின் ஆஷ்லி செசா 4-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா். தொடா்ந்து, அந்த அணியின் மெடிலெய்ன் ஜிம்மா் (7’) கோல் அடிக்க, அமெரிக்கா 2-0 என முன்னிலையை அதிகரித்ததால், இந்தியாவுக்கு நெருக்கடி கூடியது.

இந்நிலையில் 17-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் கோல் கணக்கை தொடங்கிய தீபிகா, 24-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்து அசத்தினாா். இதனால் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. முதல் பாதி முடிவடையும் முன்பாகவே நவ்னீத் கௌா் 28-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் இந்தியா அரண் போன்ற தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, அமெரிக்காவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா அடுத்த ஆட்டத்தில், ஜப்பானுடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மோதுகிறது.


மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.

More From Author

Germany, Sweden goal rain

Struggling with stress! I thought of giving up cricket: Shreyanka Patil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *