Heavy rainfall in coastal areas of Ramanathapuram district: 170 millimeters of rain recorded in Thangachimadam

ராமேசுவரம்: வங்​கக்​கடல் பகு​தி​யில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு நிலை​யால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகு​தி​களில் நேற்றுமிக கன மழை பெய்​தது. அதி​கபட்​ச​மாக தங்​கச்​சி மடத்​தில் 170 மி.மீ மழை பதிவானது. ராமேசுவரம், தங்​கச்​சிமடம், பாம்​பன், மண்​டபம் உள்​ளிட்ட கடலோரப் பகு​தி​களில் நேற்று முன்​தினம் இரவு முதல் நேற்று பிற்​பகல் வரை கன மழை பெய்​தது. இதனால் ராமேசுவரம், மண்​டபம் மற்​றும் சுற்​று​வட்​டார கிராமங்​களில் நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதலே மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட்​டது.

கனமழை​யால் ராமேசுவரம் பேருந்து நிலை​யம், லட்​சுமணத் தீர்த்​தம், தோப்​புக்​காடு, தங்​கச்​சிமடம் விக்​டோரியா நகர், பாம்​பன் முந்​தல்​முனை, தோப்​புக்​காடு உள்​ளிட்ட தாழ்​வான பகு​தி​களில் மழை நீர் தேங்​கியது. மண்​டபம் கலைஞர் நகர், சமத்​து​வபுரம் குடி​யிருப்​பு​களில் மழைநீர் புகுந்து மக்​கள் அவதிக்​குள்​ளாகினர். மாவட்​டத்​திலேயே அதி​கபட்​ச​மாக தங்​கச்​சிமடத்​தில் 170 மி.மீ. மழை பதி​வானது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Deadline to pay B.Ed. fees extended until August 27.

Is the DGP appointment being delayed for electoral advantage? Palaniswami criticizes the Chief Minister for playing with public safety.