Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to

பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெற… EB பில் கட்ட வரிசையில் நிற்பது… அலையோ அலை என அலைந்து கொண்டிருப்பது எல்லாம் இனி வேண்டாம்.

வாட்ஸ்ஆப்பில் சில கிளிக்குகளிலேயே விண்ணப்பித்துவிடலாம்.

வாட்ஸ்ஆப் நிறுவனத்துடன் தற்போது தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதன்படி, 78452 52525 எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் செய்தால், நமக்குத் தேவையான அரசுத் துறை சம்பந்தமான வேலைகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம்.

இந்தச் சாட்பாட்டிற்கு ‘நம்ம அரசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளைப் பெற முடியும்.

நம்ம அரசு
நம்ம அரசு

என்னென்ன ஆப்ஷன்கள் உண்டு?

பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெறலாம்.

விவசாயிகள் விதையிருப்பு, காலநிலை மாற்றம், உர இருப்பு, சந்தை விலை போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

சொத்து வரிக் கட்டணம், குடிநீர் வாரிய வரி கட்டணம் போன்றவற்றையும் இதில் கட்டலாம்.

EB பில் கட்டலாம்

இன்னும் பல சேவைகள் இந்தச் சாட்பாட்டில் உள்ளன.

எப்படி?

‘நம்ம அரசு’ சாட்பாட்டில், ‘Hi’ டைப் செய்தால், தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும்.

ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து, மெசேஜ் செய்யவும்.

அடுத்ததாக, ‘அரசுத் துறைகள் > துறையைத் தேர்ந்தெடுக்கலாம்’-ஐ தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குத் தேவையானதைச் செலக்ட் செய்துகொள்ளவும்.

இனி அடுத்தடுத்து சாட்பாட் சொல்வதைச் செய்தால், உங்களுக்கு வேண்டியதைச் சில கிளிக்குகளிலேயே எளிதாக முடித்துக் கொள்ளலாம்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

How was the intense protest in Iran different from previous protests?

Maharashtra Election: Election Commission bans BJP’s scheme of ‘Rs. 1500 in advance to women’