Water inflow to Mettur Dam has decreased by 7,445 cusecs.

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 8,625 கனஅடியி​லிருந்து 7,445 கனஅடி​யாக குறைந்​தது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் வடகிழக்​குப் பரு​வ​மழை பெய்த நிலை​யில் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. இதன் காரண​மாக, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 7-வது முறை​யாக கடந்த மாதம் 20-ம் தேதி முழு கொள்​ளள​வான 120 அடியை எட்​டியது. பின்​னர், மழை தணிந்​த​தால் அணைக்கு நீர்​வரத்து குறை​யத் தொடங்​கியது.

இந்​நிலை​யில், அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 10,500 கனஅடி​யாக​வும், மாலை 8,625 கனஅடி​யாக​வும் இருந்த நீ்ர்​வரத்து நேற்று காலை 7,445 கன அடி​யாக குறைந்​தது. காவிரி டெல்டா பாசனத்​துக்கு அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யங்​கள் வழியாக விநாடிக்கு 16,000 கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி​யும் நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அணையின் நீர்​மட்​டம் 119.88 அடியி​லிருந்து 119.52 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.28 டிஎம்​சியி​லிருந்து 92.70 டிஎம்​சி​யாக​வும் குறைந்துள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

AIADMK district leaders must remain vigilant: Palaniswami’s advice

The unmanned spacecraft in the Gaganyaan project will be launched within the month of March: ISRO Chairman Narayanan’s statement.