English
The motion of thanks on the Governor’s address is underway in the House. At that time, a heated debate took place between Minister Arun Raj and former Minister Sivashankar.

Speaking, Minister Arun Raj said, “They say there is only a difference of 17 lakh votes between the DMK and us.
How can the votes won by TVK standing alone be compared with the votes won by the DMK standing together?
Every vote cast for us was cast for Chief Minister Vijay.”
He said, "The votes that fell for the DMK, which formed a multi-party alliance... will also go to their alliance."
Responding to this, Sivashankar said, "It is only because of those who stood with us that your government is even running. We will now even stand alone. Are you prepared to say that you will also stand alone from now on?"

Following this, former minister Sivashankar made several criticisms of the TVK government.
Tanglish
Aalunar uraiyin meethana nandri therivikkum theermaanam avaiyil nadanthu varugirathu. Appothu amaichsar Arun Raj matrum munnal amaichsar Sivasankar idaiye kaarasaaramaana vivaadham nadanthathu.

Amaichsar Arunraj pesukaiyil, 'DMK-vukkum engalukku 17 latcham vaakkugalthaan viththiyaasam ena koorugiraargal.
Taveka thaniththu nindru petra vaakkugalum DMK koottaaga nindru petra vaakkaiyum eppadi oppida mudiyum.
Engalukku vizhuntha ovvoru vaakkum mudhalvar Vijay-kkaaga vizhunthathu.
pala katchi koottani amaiththa dmkvukku vizhuntha vaakkugal...avargalin koottanikkum serum' enap pesinaar.
itharku pathil kooriya sivasankar, 'engalodu nindravargalalthaan ungalin aatchiye odugirathu. naangal ini thaniththu kooda nirpom. neengal iniyum thaniththu nirpom ena solla thayara?' enru ethirvinai aatrinaar.

thodarnthu munnal amaichchar sivasankar thaveka aatchiyin meethu niraya vimarsanangalai munvaiththaar.
Tamil
ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நடந்து வருகிறது. அப்போது அமைச்சர் அருண் ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், ‘திமுகவுக்கும் எங்களுக்கு 17 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம் என கூறுகிறார்கள்.
தவெக தனித்து நின்று பெற்ற வாக்குகளும் திமுக கூட்டாக நின்று பெற்ற வாக்கையும் எப்படி ஒப்பிட முடியும்.
எங்களுக்கு விழுந்த ஒவ்வொரு வாக்கும் முதல்வர் விஜய்க்காக விழுந்தது.
பல கட்சி கூட்டணி அமைத்த திமுகவுக்கு விழுந்த வாக்குகள்…அவர்களின் கூட்டணிக்கும் சேரும்’ எனப் பேசினார்.
இதற்கு பதில் கூறிய சிவசங்கர், ‘எங்களோடு நின்றவர்களால்தான் உங்களின் ஆட்சியே ஓடுகிறது. நாங்கள் இனி தனித்து கூட நிற்போம். நீங்கள் இனியும் தனித்து நிற்போம் என சொல்ல தயாரா?’ என எதிர்வினை ஆற்றினார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தவெக ஆட்சியின் மீது நிறைய விமர்சனங்களை முன்வைத்தார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.


