English
Although this verdict came after ten years, Appavu said he welcomes it because justice has been done to him, and added that this verdict will serve as a precedent for many election-related cases. Inbathurai said that my argument that the postal votes received by Appavu were invalid was technical in nature; since this verdict has been delivered without taking that into account, he said he would appeal against it.
Tanglish
pathaandugalukkup pinbu indha theerppu vandhaalum, idhil thanakku niyaayam kidaithiruppadhaal varaverkiren endru kooriya appaavu, indha theerppu theerththal thodarbaana pala vazhakkugalukku oru mun maadhiriyaaga irukkum endraar. appaavukkuk kidaitha thabaal vaakkugal sellaadhu endra enadhu vaadham thozhilnutparithiyaanadhu; adhaik karuththil kollaamal indha theerppu vazhangappattiruppadhaal indha theerppukku edhiraaga mel muraiyidu seyyappovadhaaga therdhiviththaar inbathurai.
Tamil
பத்தாண்டுகளுக்குப் பின்பு இந்த தீர்ப்பு வந்தாலும், இதில் தனக்கு நியாயம் கிடைத்திருப்பதால் வரவேற்கிறேன் என்று கூறிய அப்பாவு, இந்த தீர்ப்பு தேர்தல் தொடர்பான பல வழக்குகளுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்றார். அப்பாவுக்குக் கிடைத்த தபால் வாக்குகள் செல்லாது என்ற எனது வாதம் தொழில்நுட்பரீதியானது; அதைக் கருத்தில் கொள்ளாமல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தார் இன்பதுரை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

