English
Accepting the call from the T.V.K., IUML party leader Kadhar Moideen has stated that they will join the cabinet. Speaking to reporters about this, he said, "When we expressed support to the T.V.K., we did not set any conditions for them. However, the new T.V.K. government led by Vijay invited us to participate in the cabinet with a majority. They asked for your approval to give a cabinet position to one of our two MLAs. Kadhar Moideen said this was unexpected news for us. We neither asked for it nor made any requests. We thank them for inviting us with a majority. After consulting with everyone, we are joining the T.V.K. cabinet."
Among the two MLAs, we have chosen Babanasam MLA Shajahan to be included in the cabinet. He expressed his wish that Vijay's good governance should take place in Tamil Nadu.
Tanglish
Tha.Ve.Kavin azhaippai aetrthu amaicharavayil idamperuvadhaga AiyuEMEL kadchi thalaivar Kaathar Moydheen therivithirukkiraar. Ithu thodarbaaga seithiyalargalidam pesiya avar, "Naangal Tha.Ve.Kavirkku aadharavu therivithapodhu entha nipandhanaiyum avargalidam vaikkavillai. Aanaal Vijay thalaimaiyilana puthiya Tha.Ve.Ka arasu perunthanmaiyudan amaicharavayil pangeyarka azhaippu viduththargal. Engalin irandu MLAgalil oru MLAvukku amaicharavayil idam tharugirom adharku ungal opputhal vendum endru kettanar. Kaathar Moydheen idhu engalukku ethirpaaradha oru seithi. Naangal ketkavum illai, korikkai vaikkavum illai. Perunthanmaiyodu engalai azhaiththadharku nandri. Elloridamum kalandhu pesi Tha.Ve.Ka amaicharavayil pangeyarkkirom."
Irantu MLAkgalil Papanasam MLA Shaajaan avargalai amaicharavayil idampera therivu seidirukkirOm. Vijayyin nallatchi TamilnADil nadakka vendum endru vaazhthugirOm " endru terivithirukkirAr.
Tamil
த.வெ.கவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம்பெறுவதாக ஐயூஎம்எல் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்தபோது எந்த நிபந்தனையும் அவர்களிடம் வைக்கவில்லை.
ஆனால் விஜய் தலைமையிலான புதிய த.வெ.க அரசு பெருந்தன்மையுடன் அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள்.
எங்களின் இரண்டு எம்எல்ஏக்களில் ஒரு எம்எல்ஏவுக்கு அமைச்சரவையில் இடம் தருகிறோம் அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும் என்று கேட்டனர்.

இது எங்களுக்கு எதிர்பாராத ஒரு செய்தி. நாங்கள் கேட்கவும் இல்லை, கோரிக்கை வைக்கவும் இல்லை.
பெருந்தன்மையோடு எங்களை அழைத்ததற்கு நன்றி. எல்லோரிடமும் கலந்து பேசி த.வெ.க அமைச்சரவையில் பங்கேற்கிறோம்.
இரண்டு எம்எல்ஏக்களில் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் அவர்களை அமைச்சரவையில் இடம்பெற தேர்வு செய்திருக்கிறோம். விஜய்யின் நல்லாட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் ” என்று தெரிவித்திருக்கிறார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.