English
Condemning the government’s reluctance to allocate sufficient funding to the military in Britain, the country’s Defence Secretary John Healey suddenly resigned from his post on Thursday.
In his resignation letter to British Prime Minister Keir Starmer, John Healey accused the government of compromising national security at a time when threats are increasing globally.
He further noted, “The government has fallen far behind in implementing the investments needed to strengthen military structures in line with the current era. The Prime Minister has failed to ensure the funding necessary to keep the armed forces in a state of readiness,” John Healey said.
As spending on welfare schemes continues to rise, the government has not reached a consensus on how to raise funds to meet military needs. As a result, the release of funding for the British military has been delayed for the past few months.
John Healey had been overseeing the defence department since the ruling Labour Party came to power in July 2024. Already, following last month’s local election defeat, opposition has been growing within the party against Keir Starmer’s leadership. After Health Secretary Wes Streeting, the Defence Secretary’s resignation has further intensified the crisis.
Tanglish
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தாா்.
உலக அளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், தேசப் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்து கொள்வதாக பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருக்கு ஜான் ஹீலி அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில் குற்றஞ்சாட்டினாா்.
மேலும், ‘தற்போதைய காலகட்டத்துக்கேற்ப ராணுவ கட்டமைப்புகளைப் பலப்படுத்தத் தேவையான முதலீடுகளை செயல்படுத்துவதில் அரசு வெகுவாகப் பின்தங்கியுள்ளது. ராணுவப் படைகளைத் தயாா்நிலையில் வைத்திருக்கத் தேவையான நிதியை உறுதி செய்ய பிரதமா் தவறிவிட்டாா்’ என்று ஜான் ஹீலி குறிப்பிட்டாா்.
nalath thittangalukkaana selavugal adhigarithu varum nilaiyil, raanuva thevaigalukku eedukodukkum vagaiyil eppadi nidhiyai thirattuvadhu enbathil arasukkul orumitha karuthu ettappadavillai. idhanaal, brittan raanuvaththukkaana nidhiyai veliyiduvadhil kadandha sila maadhangalaagave izhubari needithu varugiradhu.
kadandha 2024 joolaiyil aazhum thozhilaalar katchi aatchikku vandhadhilirundhu jaan heeli paadhukaapputh thuraiyai niirvagithu vandhaar. aerkkenave kadandha maadham ullaatchith therthal tholviyai aththu, kiyaar staarmarin thalaimaikku edhiraagap katchikkul ethirppuk kilambiyulladhu. sugaadhaara amaichchar ves streettingai thodarndhu, paadhukaappu amaichcharin raajinamaa nerukkadiyai melum theeviraappaduththiyulladhu.
Tamil
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தாா்.
உலக அளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், தேசப் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்து கொள்வதாக பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருக்கு ஜான் ஹீலி அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில் குற்றஞ்சாட்டினாா்.
மேலும், ‘தற்போதைய காலகட்டத்துக்கேற்ப ராணுவ கட்டமைப்புகளைப் பலப்படுத்தத் தேவையான முதலீடுகளை செயல்படுத்துவதில் அரசு வெகுவாகப் பின்தங்கியுள்ளது. ராணுவப் படைகளைத் தயாா்நிலையில் வைத்திருக்கத் தேவையான நிதியை உறுதி செய்ய பிரதமா் தவறிவிட்டாா்’ என்று ஜான் ஹீலி குறிப்பிட்டாா்.
நலத் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எப்படி நிதியைத் திரட்டுவது என்பதில் அரசுக்குள் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால், பிரிட்டன் ராணுவத்துக்கான நிதியை வெளியிடுவதில் கடந்த சில மாதங்களாகவே இழுபறி நீடித்து வருகிறது.
கடந்த 2024 ஜூலையில் ஆளும் தொழிலாளா் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜான் ஹீலி பாதுகாப்புத் துறையை நிா்வகித்து வந்தாா். ஏற்கெனவே கடந்த மாதம் உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை அடுத்து, கியா் ஸ்டாா்மரின் தலைமைக்கு எதிராகப் கட்சிக்குள் எதிா்ப்புக் கிளம்பியுள்ளது. சுகாதார அமைச்சா் வெஸ் ஸ்ட்ரீட்டிங்கைத் தொடா்ந்து, பாதுகாப்பு அமைச்சரின் ராஜிநாமா நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
மூலதளம்: உலகம்
Click the link above to read the full article on the original website.