Sports 1 min readAugust 4, 2026

TNPL cricket starts today!

TNPL cricket starts today!

English

The 10th season of the Tamil Nadu Premier League (TNPL) cricket tournament begins on Tuesday (Aug. 4).

In the first match, to be held at the Natham ground in Dindigul, the defending champions IDream Tiruppur Tamizhans, led by Sai Kishore, will take on the Dindigul Dragons, led by Baba Indrajith.

The first phase of the tournament will be played in Dindigul from August 4 to 15. Tickets for the matches can be obtained at the ticket counter set up near the NPR College entrance.

The second phase of matches will be played in Chennai from August 18 to 28. The matches can be watched live on the Sony Ten 4 Tamil channel.

Tanglish

Tamilnadu Premieria League (TNPL) கிரிக்கெட் pottiyin 10-aavathu season செவ்வாய்க்கிழமை (Aug. 4) thodangugirathu.

Thindukkal Natham maidhanathil nadaiperum mudhal aattathil, Sai Kishore thalaimaiyilaana nadappu champion I Dream Tiruppur தமிழன்ஸ் - Baba Indrajith thalaimaiyilaana Thindukkal Dragons anigal mothugindrana.

Ippottiyin mudhal kattam aattangal Thindukkalil August 4 mudhal 15-aam thethi varai nadaiperavullana. Atharkana ticketugalai, NPR college nuzhaivaayil paguthiyil amaindhulla ticket virpanai maiyathil peralaam.

2-aavathu kattam aattangal Chennaiyil August 18 mudhal 28 varai vilaiyaadappadavullana. Aattangalai Sony Ten 4 Tamil channelil neralaiyaaga kaanalaam.

Tamil

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது சீசன் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) தொடங்குகிறது.

திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், சாய் கிஷோா் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஐ டிரீம் திருப்பூா் தமிழன்ஸ் - பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கலில் ஆகஸ்ட் 4 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. அதற்கான டிக்கெட்டுகளை, என்பிஆா் கல்லூரி நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள டிக்கெட் விற்பனை மையத்தில் பெறலாம்.

2-ஆவது கட்ட ஆட்டங்கள் சென்னையில் ஆகஸ்ட் 18 முதல் 28 வரை விளையாடப்படவுள்ளன. ஆட்டங்களை சோனி டென் 4 தமிழ் சேனலில் நேரலையாகக் காணலாம்.