Politics 1 min readAugust 5, 2026

Tamil Nadu Budget 2026! New scheme announced for government employees!

Tamil Nadu Budget 2026! New scheme announced for government employees!

English

In the Tamil Nadu budget for the 2026–27 financial year, an announcement has been made that a new medical insurance scheme will be implemented for government employees.

The Tamil Nadu budget for the 2026–27 financial year was presented in the Assembly today. In the budget presented by the Tamil Nadu Finance Minister, the word “success” has been added to both the schemes that were already being implemented and the new schemes.

Important announcements for women, students, youth, and various sectors have also been included in the budget.

In the announcement for government employees in the Tamil Nadu budget,

  • A new medical insurance scheme has been introduced for government employees.

  • The basic insurance coverage has been increased from Rs. 5 lakh to Rs. 7.5 lakh.

  • Insurance for specified illnesses will be provided up to Rs. 12 lakh.

  • Financial assistance of up to Rs. 15 lakh will be provided for rare diseases.

  • It has been announced that Rs. 838 crore has been allocated for 2,992 types of treatments and 1,535 empaneled hospitals for Tamil Nadu government employees.

Tanglish

2026 - 27ஆம் நிதியandukkana தமிழக பட்ஜெட்டில், அரசு oozhiyargalukku புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2026 - 27ஆம் நிதியandukkana தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் vetri என்ற vaarthai சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

Tamilaga padjettil arasu oozhiyargalukkaana arivippil,

  • Arasu oozhiyargalukku puthiya maruththuva kaappidu thittam kondu varappattullathu.

  • Adippadai kaappidu thittam ரூ.5 latchaththil irundhu ரூ.7.5 latchamaaga uyarvu.

  • Kurippitta noygalukkaana kaappidu ரூ.12 ilatcham varai vazhangappadum.

  • Ariya noygalukku ரூ.15 latcham varai nidiyuthavi vazhangappadum.

  • Tamilaga arasu oozhiyargalukku 2,992 vagaiyaana sithichaigal matrum 1,535 angikarikkappatta maruththuvamanagalukku ரூ.838 kodi othukkeedu seiyyappaduvathaaga arivikkappattullathu.

Tamil

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் வெற்றி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பில்,

  • அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • அடிப்படை காப்பீடு திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்வு.

  • குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூ.12 இலட்சம் வரை வழங்கப்படும்.

  • அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

  • தமிழக அரசு ஊழியர்களுக்கு 2,992 வகையான சிகிச்சைகள் மற்றும் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.838 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.