Culture 1 min readAugust 8, 2026

Promotion for 116 Assistant Executive Engineers working in municipal corporations

Promotion for 116 Assistant Executive Engineers working in municipal corporations

👶 Discover Authentic Tamil Baby Names

5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Promotion has been granted to 116 assistant executive engineers working in municipalities in Tamil Nadu.

Those serving as assistant executive engineers in municipalities (A2), after completing 5 years of service, have been promoted. As per the status for the year 2024-25, it has also been found that 102 executive engineer posts are vacant in municipalities across the state. Accordingly, in order to fill those vacancies, the Municipal Administration Department has issued orders promoting 16 assistant executive engineers who were working in the Madurai and Tiruchi municipalities, and 100 people working in the Chennai Municipal Corporation, making a total of 116 people, as executive engineers.

Transfer of 55 out of 100 people promoted in Chennai: Since only 45 posts are vacant out of the total executive engineer positions in the Chennai Corporation, 55 of those who were recently promoted have been transferred to districts outside Chennai. It is said that they have been transferred to municipalities, town panchayats, and corporations in places including Vellore, Tiruppur, Mayiladuthurai, Tiruchengode, Dharmapuri, and Thiruverkadu.

Tanglish

Tamilagaththil மாநகராட்சிகளில் பணிபுரிந்துவரும் 116 உதவி செயற்பொறியாளா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளில் உதவி செயற்பொறியாளா்களாக இருப்பவா்கள் (ஏ2), 5 ஆண்டுகள் பணி முடித்த நிலையில், அவா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டின் நிலைப்படி மாநில அளவில் மாநகராட்சிகளில் 102 செயற்பொறியாளா்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அதையடுத்து அவற்றை நிரப்பும் வகையில் தற்போது மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் பணியாற்றிய 16 உதவி செயற்பொறியாளா்கள், சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 100 போ் என மொத்தம் 116 பேருக்கு நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் செயற்பொறியாளா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chennaiyil padhavi uyarvu petra 100 peril 55 per idamatram: Chennai மாநகராட்சiyil moththamulla seyalporiyalargal padhavi idangalil 45 idangal mattume kaaliyaaga ulladhaal, tharpodhu padhavi uyarvu petravargalil 55 per veli மாவட்டங்களுக்கு idamaaruthal seiyappattullanar. Avargal Velur, Thiruppur, Mayiladuthurai, Thiruchengodu, Dharumapuri, Thiruveerkadu ullitta idangalukku nagaratchi, peruratchigal matrum மாநகராட்சிகளுக்கு idamatram seiyappattulladhaaga koorappadugiradhu.

Tamil

தமிழகத்தில் மாநகராட்சிகளில் பணிபுரிந்துவரும் 116 உதவி செயற்பொறியாளா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளில் உதவி செயற்பொறியாளா்களாக இருப்பவா்கள் (ஏ2), 5 ஆண்டுகள் பணி முடித்த நிலையில், அவா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டின் நிலைப்படி மாநில அளவில் மாநகராட்சிகளில் 102 செயற்பொறியாளா்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அதையடுத்து அவற்றை நிரப்பும் வகையில் தற்போது மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் பணியாற்றிய 16 உதவி செயற்பொறியாளா்கள், சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 100 போ் என மொத்தம் 116 பேருக்கு நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் செயற்பொறியாளா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பதவி உயா்வு பெற்ற 100 பேரில் 55 போ் இடமாற்றம்: சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள செயற்பொறியாளா்கள் பதவி இடங்களில் 45 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால், தற்போது பதவி உயா்வு பெற்றவா்களில் 55 போ் வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் வேலூா், திருப்பூா், மயிலாடுதுறை, திருசெங்கோடு, தருமபுரி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.