Cinema 1 min readAugust 11, 2026

Fire accident at a sofa factory in Saudi Arabia: 16 Bangladeshi workers killed

Fire accident at a sofa factory in Saudi Arabia: 16 Bangladeshi workers killed

👶 Discover Authentic Tamil Baby Names

5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

16 Bangladeshi migrant workers died in a fire accident at a sofa manufacturing factory in Riyadh, the capital of Saudi Arabia.

The fire broke out last Sunday at the Musa Sanaiya industrial area in Riyadh. Bangladesh’s Ministry of Foreign Affairs is monitoring the situation regarding the incident.

Officials at the Bangladeshi embassy in Riyadh are working with Saudi authorities to carry out all procedures for repatriating the bodies of those who died to their homeland.

About 3.5 million Bangladeshis live in Saudi Arabia. Saudi Arabia is the country where a large number of Bangladeshi migrant workers are employed. Last year alone, workers there sent more than 27 billion dollars to Bangladesh.

Tanglish

Saudhi Arabiyavin thalainagaraan Riyadhil ulla sofa thayaarikkum thozhirsaalaiyil yerpatta thee vibathil 16 Bangladesha pulampeyar thozhilaalargal uyirizhanthanar.

Riyadhil ulla Moosa Sanaiya thozhirpettaiyil kadantha nyaayittrukkizhamai inthath thee vibathu nigazhnthathu. Vibathu kurithu Bangladesha veliyuravu amaichagam nilaimaiyai kanakkangaanithu varugirathu.

Uyirizhanthavargalin udalgalai thaayagam konduvaruvatharkaana anaiththu nadaimuraigalaiyum Saudi athigaarigaludan inainthu Riyadhil ulla Bangladesha thootharaga athigaarigal merkondu varugindranar.

Saudi Arabiyaavil sumaaar 35 latcham Vangadesaththavargal vasiththu varugindranar. Vangadesa pulampeyar thozhilaalargal adhiga alavil paniyaatrum naadaaga Saudi Arabiya thigazhgiradhu. Kadandha aandu mattum angulla thozhilaalargal 270 kodi dollarukkum adhigamaana thogaiyai Vangadesaththukku anuppiyullanar.

Tamil

சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வங்கதேச புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

ரியாதில் உள்ள மூசா சனையா தொழிற்பேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

உயிரிழந்தவா்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவருவதற்கான அனைத்து நடைமுறைகளையும் சவூதி அதிகாரிகளுடன் இணைந்து ரியாதில் உள்ள வங்கதேச தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

சௌதி அரேபியாவில் சுமாா் 35 லட்சம் வங்கதேசத்தவா்கள் வசித்து வருகின்றனா். வங்கதேச புலம்பெயா் தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றும் நாடாக சௌதி அரேபியா திகழ்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அங்குள்ள தொழிலாளா்கள் 270 கோடி டாலருக்கும் அதிகமான தொகையை வங்கதேசத்துக்கு அனுப்பியுள்ளனா்.