Diaspora 1 min readJuly 27, 2026

3 astronauts returned to Earth from the International Space Station!

3 astronauts returned to Earth from the International Space Station!

English

Three astronauts safely returned to Earth from the International Space Station on Sunday.

The United States, Russia, and other countries have jointly built the International Space Station in space. At that space station, American astronaut Chris Williams and Russian astronauts Sergei Kud-Sverchkov and Sergei Mikheev had been staying for eight months, carrying out research and maintenance work.

In this situation, after completing their mission, the three of them departed from the International Space Station for Earth aboard Russia’s Soyuz MS-28 spacecraft. The spacecraft landed southeast of Zhezkazgan in Kazakhstan. Following this, all three safely exited the spacecraft.

For Williams and Mikayev, this was their first spaceflight. For Shcherkov, it was his second spaceflight.

Tanglish

Saaththesha vinveli nilaiyaththilirundhu boomikku 3 vinveli veerargal nyaayittrukkizhamai paadhugaappaagath thirumbinaar.

Vinveliyil amerikkaa, rashiyaa ullitta naadugal koottaaga serndhu saaththesha vinveli nilaiyaththai amaiththullana. Andha vinveli nilaiyaththil amerikka vinveli veerar Kiris Villiyams, rashiya vinveli veerargal Sergei Kud Sverskov, Sergei Migev aagiyaor 8 maadhangalaagath thangiyirundhu aayvu matrum paraamarippup panigalai seidhu vandhanaar.

Innilaiyil, 3 perum thangal pani mudinthathaiyaduthu, saaththesa vinnveli nilaiyaththil irunthu Rashiyavin Soyuz MS-28 vinnkalam moolam boomikku purappattanar. Antha vinnkalam Kazhaksthanil ulla Thezhikaskanil irunthu thenkizhakke tharaiyirangiyathu. Ithaiyaduthu moovarum vinnkalaththil irunthu pathukaappaaga veliye vanthanar.

3 peril Williams, Mikev aagiyorukku ithu muthal vinnvelip payanamaagum. Svershkovukku 2-aavathu vinnvelip payanamaagum.

Tamil

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு 3 விண்வெளி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாகத் திரும்பினா்.

விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக சோ்ந்து சா்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. அந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்க விண்வெளி வீரா் கிறிஸ் வில்லியம்ஸ், ரஷிய விண்வெளி வீரா்கள் சொ்கேய் குட் ஸ்வொ்ச்கோவ், சொ்கேய் மிகேவ் ஆகியோா் 8 மாதங்களாகத் தங்கியிருந்து ஆய்வு மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்து வந்தனா்.

இந்நிலையில், 3 பேரும் தங்கள் பணி முடிந்ததையடுத்து, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷியாவின் சோயூஸ் எம்எஸ்-28 விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனா். அந்த விண்கலம் கஜகஸ்தானில் உள்ள தேஜிகாஸ்கானில் இருந்து தென்கிழக்கே தரையிறங்கியது. இதையடுத்து மூவரும் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வந்தனா்.

3 பேரில் வில்லியம்ஸ், மிகேவ் ஆகியோருக்கு இது முதல் விண்வெளிப் பயணமாகும். ஸ்வொ்ச்கோவுக்கு 2-ஆவது விண்வெளிப் பயணமாகும்.