English
Tamil Nadu BJP chief Nainar Nagendran met and spoke with actor Rajinikanth on Tuesday.
The meeting took place at Rajinikanth’s residence in Chennai’s Poes Garden. Tamil Nadu BJP in-charge Aravind Menon, BJP state secretary Karate Thiagarajan, and others were present at the time.
Following this, in a post on the ‘X’ platform, Nainar Nagendran said, ‘I presented Rajinikanth with special books released to highlight the major development projects implemented during Prime Minister Narendra Modi’s 12-year rule and the nation’s journey of progress,’ he noted in the post.
Tanglish
Nadigaar Rajiniyudan தமிழக பாஜக தலைவaar Nainaar Naagendran sevvaykkizhamai sandhiththup pesinaar.
Chennai Poyes Gaaradanil ulla Rajiniyin illaththil indha sandhippu nadaiperraது. Appothu, தமிழக பாஜக melidap poruppaalar Aravindh Menon, பாஜக maanila seyalaar Kaaraathe Thiyaagaraajan ullittaோர் udanirundhanaar.
Ithai thodarndhu, Nainaar Naagendran ‘X’ thalaththil veliயிட்ட padhivil, ‘Pradhamar Narendra Modiyin kadandha 12 aandukaala aatchiyil seyalpaduththappatta mukkiya valarchchi thittangal matrum naattin munnetra payanaththai eduththuraikkum vagaiyil veliயிடப்பட்ட sirappu noolgalai Rajiniyidam vazhanginen’ ena andha padhivil kurippittullaar avar.
Tamil
நடிகா் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், பாஜக மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, நயினாா் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை ரஜினியிடம் வழங்கினேன்’ என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா் அவா்.
மூலதளம்: தமிழ்நாடு
Click the link above to read the full article on the original website.

