English
In the Iran war that began on February 28, there had been a 'temporary ceasefire' since April 8.
However, yesterday Iran carried out missile and drone attacks on Middle Eastern countries such as Kuwait and Bahrain.
Iran also said that in this attack it struck the headquarters of the U.S. Navy's Fifth Fleet in Bahrain, as well as a separate air base in the region.
Rejecting Iran's claim, the U.S. Central Command, one of the U.S. defense forces, has issued a statement...

"In response to attempted attacks by Iran across the Middle East on June 2, U.S. forces successfully intercepted several of Iran’s ballistic missiles and drones, and also carried out defensive strikes on Qeshm Island.
Iran launched several ballistic missiles toward its regional neighboring countries. However, none of them hit their targets.
Two Iranian missiles launched toward Kuwait fell and crashed along the way without reaching their target.
Three missiles launched toward Bahrain were immediately shot down by U.S. and Bahraini air defense forces.
Shortly before this, U.S. Central Command (CENTCOM) forces shot down three suicide attack drones launched by Iran at commercial ships legally traveling in international waters.

In addition, U.S. forces also carried out defensive strikes on the Iranian military's ground control center on Qeshm Island.
No American troops were harmed in any of these incidents. During the current ceasefire, CENTCOM forces remain vigilant and prepared to defend and fight against Iran’s unjust aggressions."
Tanglish
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் 'தற்காலிக போர் நிறுத்தம்' இருந்து வந்தது.
ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தலைமையகத்தையும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனி விமானத் தளத்தையும் தாக்கியதாகவும் ஈரான் கூறியது.
ஈரானின் இந்தப் பேச்சை மறுத்து அமெரிக்க தற்காப்புப் படைகளில் ஒன்றான அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...

"Maththiyak kizakku naadugal muzhuvathum June 2 anru Iran nadaththa muyanra thaakkuthalukku pathiladiyaaga, Amerikkap padaigal Iranin pala balistik aevuganaihal matrum dronkalai vettrikaramaaga muriyadiththathodu, Keshm theevilum tharkaappu thaakkuthalgalai nadaththiyullana.
Iraan thanathu piraanthiya anndai naadugalai nokkip pala paalistik aevuganaigalai aeviyathu. Iruppinum, avai ethuvume ilakkugalai thaakkavillai.
Kuvaithai nokki aevappatta irandu Iraaniya aevuganaigal ilakkai ettamal vazhiyileye vizhunthu norungina.
Bahraiinai nokki aevappatta moondru aevuganaigal amerikka matrum Bahraiin vaan paadhugaappu padaigalaal udanadiyaaga suttu veezhthappattana.
Itharku satru munnathaaga, saththaravasaak kadal paguthiyil sattappoorvamaaga payaniththuk kondiruntha vaniga kappalgalai nokki Iraan aeviya moondru tharkolai thaakkuthal dronugalai amerikka maththiya kattalaiyaga (CENTCOM) padaigal suttu veezhthina.

Melum, amerikkap padaigal Keshm theevil ulla Iraniya raanuvathin tharaikkattuppaattu maiyathin meethu tharkaappu thaakkuthalgalaiyum nadathina.
indhach sambavangalil amerikka veerargal yaarukkum endhap paadippum yerpadavillai. tharpodhu amalil irukkum por niruththathin podhu, eeraanin aniyaayamaana aakkiramippugalukku edhiraaga padaigalai paadhukaakkavum, edhirththup poraadavum sentkaam padaigal thodarndhu vizhippudanum thayaar nilaiyilum ullana."
Tamil
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் ‘தற்காலிக போர் நிறுத்தம்’ இருந்து வந்தது.
ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தலைமையகத்தையும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனி விமானத் தளத்தையும் தாக்கியதாகவும் ஈரான் கூறியது.
ஈரானின் இந்தப் பேச்சை மறுத்து அமெரிக்க தற்காப்புப் படைகளில் ஒன்றான அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது…

“மத்தியக் கிழக்கு நாடுகள் முழுவதும் ஜூன் 2 அன்று ஈரான் நடத்த முயன்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் ஈரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததோடு, கெஷ்ம் தீவிலும் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகளை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இருப்பினும், அவை எதுவுமே இலக்குகளைத் தாக்கவில்லை.
குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரானிய ஏவுகணைகள் இலக்கை எட்டாமல் வழியிலேயே விழுந்து நொறுங்கின.
பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதற்கு சற்று முன்னதாக, சர்வதேசக் கடல் பகுதியில் சட்டப்பூர்வமாகப் பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பல்களை நோக்கி ஈரான் ஏவிய மூன்று தற்கொலைத் தாக்குதல் டிரோன்களை அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் சுட்டு வீழ்த்தின.

மேலும், அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய ராணுவத்தின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் மீது தற்காப்புத் தாக்குதல்களையும் நடத்தின.
இந்தச் சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்தத்தின் போது, ஈரானின் அநியாயமான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக படைகளைப் பாதுகாக்கவும், எதிர்த்துப் போராடவும் சென்ட்காம் படைகள் தொடர்ந்து விழிப்புடனும் தயார் நிலையிலும் உள்ளன.”
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.