Heavyweight CMS-03 satellite stabilization: ISRO achievement with successful launch into space

ஸ்ரீஹரிகோட்டா: கடற்​படை பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் திட்​ட​மிட்ட சுற்​றுப்​பாதை​யில் வெற்றிகர​மாக விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் தனது வரலாற்​றில் புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு அதி​கபட்ச எடை கொண்ட செயற்​கைக்​கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்​துள்​ளது.

அதிகஎடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை பிற நாடு​களின் உதவி கொண்டு விண்​னுக்கு அனுப்ப வேண்​டிய நிலையில் இஸ்ரோ இருந்​தது. அதனால் செல​வீனம் அதிகரிப் பதுடன், நேர விரயமும் ஏற்பட்​டது. இதையடுத்து அனைத்து ராக்​கெட்​களின் உந்து​விசைகளை அதி​கரிக்​கும் பணி​களை இஸ்ரோ முன்​னெடுத்​தது. அதன்​பல​னாக இஸ்​ரோ​வின் பாகுபலி எனப்​படும் எல்​விஎம்-3 ராக்​கெட்​டின் எஸ் 200 மோட்​டார்​கள், விகாஸ் இயந்​திரம், கிரையோஜெனிக் இயந்​திரம் ஆகிய​வற்​றின் திறன்​ மேம்​படுத்​தப்​பட்டு அதன் உந்​து​விசை வேக​மானது வழக்​கத்​தை​விட 14 விநாடிகள் வரை அதி​கரிக்​கப்​பட்​டது. இதையடுத்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூல​மாக 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்​எஸ்​-03 செயற்​கைக் கோளை விண்​ணில் புவி வட்​டப் பாதைக்கு செலுத்த இஸ்ரோ முடிவு செய்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Women’s WC Final | India sets a target of 299 runs for South Africa!

All-party meeting is a drama to change direction: Nainar Nagendran’s critique