சென்னை: சென்னையில் இன்று (அக்.22) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று மாலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. இதனால் இன்று மொத்தமாக பவுனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது.
எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்தச் சூழலில், நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று காலையில் குறைந்தது. இப்போது இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
Click the link above to read the full article on the original website.


