சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, திமுகவில் இணைந்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்துவந்தார். இவர் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் கைகூடாத நிலையில் சில மாதங்களாகவே அதிருப்தியில் இருந்த மனோஜ் பாண்டியன், திமுகவில் சேர முடிவு செய்தார். இதையடுத்து நேற்று சென்னை அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
Click the link above to read the full article on the original website.


